PM Modi inauguration TN: 11 மெடிக்கல் காலேஜ் கொடுத்தது நாங்கள் தான்.. எகிறி குதித்து கொக்கரிக்கும் பாஜக..!

By vinoth kumarFirst Published Jan 12, 2022, 12:49 PM IST
Highlights

தமிழகத்தில் என்றுமே தாமரை மலராது என்ற சொல்லி வந்தவர்கள் அனைவரும் வியக்கும் வகையில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரியை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். இதனால், அதலபாதாளத்தில் இருந்து வந்த தமிழக பாஜக செல்வாக்கு உயர தொடங்கியுள்ளதால் ஆளும் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. 

தமிழகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி  இன்று மாலை காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்கிறார். மத்திய அரசு நிதியில் இருந்து 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த அரசு மருத்துவகல்லூரி முன்வைத்து பாஜகவினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால், பிரதமர் மோடியின் திட்டங்களால் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்து வருவதாக கூறி வருவது ஆளுங்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை இன்று பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தமிழகத்துக்கு வந்து திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம்திறந்து வைக்க உள்ளார். இதன்படி இன்று நடக்கும் இந்தநிகழ்வில், முதல்வர் ஸ்டாலின், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கின்றனர். 

இந்நிலையில் மோடி பிரதமர் பதவி ஏற்றது முதல் கடந்த 7 ஆண்டுகளில் நாட்டில் எம்பிபிஎஸ் இடங்கள் 79.6%  அதாவது 51,348  என்ற எண்ணிக்கையில் இருந்து 92,222 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 80. 7% அதாவது 31,185  இடங்களிலிருந்து 56374 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக 2014க்கு முன் மொத்த மருத்துவ இடங்களில் எண்ணிக்கை சுமார் 82 500 ஆக கடந்த இருந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் 80 சதவீதம் அல்லது  66000 இடங்கள் கூடுதலாக உயர்ந்துள்ளது. அதேபோல் மருத்துவ கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை அரசு மற்றும் தனியார் இரண்டும் சேர்த்து 387 லிருந்து 596 ஆக உயர்ந்துள்ளது. இது 54 சதவீதம் அதிகமாகும். கடந்த ஏழு ஆண்டுகளில் 60,000 எம்பிபிஎஸ் முதுநிலை மருத்துவ இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் தமிழகத்துக்குக் கூடுதலாக 1,450 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இதை முன்னெத்து தமிழக பாஜகவினர் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் சமூக வலைதளங்களில் வைரலாக்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த 11 மருத்துவக்கல்லூரி அமைவதால் கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் வழிவகுக்கும் என்று கூறிவருகின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் ஒரு போதும் தாமரை மலராது என்று கூறி வந்த ஆளுங்கட்சிக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!