2 முறை MLA மகேஷ்க்கு அமைச்சர்... 3 முறை MLA TRB ராஜாவுக்கு இல்லையா.? பாலு அழுத்தம்.. உடைக்கும் சவுக்கு சங்கர்

By Ezhilarasan BabuFirst Published Jan 12, 2022, 12:20 PM IST
Highlights

இரண்டு முறை எம்எல்ஏவான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருக்கே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக வென்று வந்துள்ள தனது மகனுக்கு இல்லையா? என அவர் முதல்வர் ஸ்டாலினை வற்புறுத்தி வந்திருக்கக்கூடும், அதனால் ஒரு புதிய அமைச்சர் பதவியை உருவாக்க முடியாது என்பதால் கட்சியில் ஒரு முக்கிய பதவியை கொடுக்க திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. 

மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகியும் தன் மகனுக்கு அமைச்சர் பதவி இல்லையா என நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு அழுத்தம் கொடுத்ததன் எதிரொலியாகத்தான் டிஆர்பி ராஜாவுக்கு திமுக ஐடி விங் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது என கூறியுள்ளார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாகத்தான் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகிறது என அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் அரசு எடுத்து வரும் மக்கள் நலத் திட்டங்கள் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். கொரோனா தொற்று மற்றும் மழை வெள்ளத்தின் போது அரசு செயல்பட்ட விதம், மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தமிழக அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலை உள்ளது. கடந்த  ஆட்சியாளர்கள் நிதிநிலையை சீரழித்து விட்டனர், தமிழக அரசின் கருவூலம் காலியாகிவிட்டது என ஆட்சி பொறுப்பேற்ற உடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்ததே அதற்கு சாட்சியாக உள்ளது.

அதில் அவர் கடந்த ஆட்சியாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்ததுடன் நிலைமை சீரடைய ஒரு சில ஆண்டுகள் எடுக்கும் எனவும் கூறியிருந்தார். இதவே திமுக தேர்தல் நேரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. எனவே தற்போதுள்ள நிதி நிலைமையை சீர் செய்ய வேண்டிய  பொறுப்பு, நிர்பந்தம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்கான பல்வேறு  முயற்சிகளில் அவர் முனைப்பு காட்டி  வருகிறார். மாநில அரசுக்கு வருவாயை எந்த வழிகளில் எல்லாம் உருவாக்க முடியும் என்பது குறித்தும்,  அதேநேரத்தில் தற்போதுள்ள கடன் சுமையை குறைப்பதற்கான வழிகளையும் அவர் ஆராய்ந்து வருகிறார். இந்நிலையில்தான் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுதொடர்பாக திமுக தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை. அதேநேரத்தில் பிடிஆர் தியாகராஜனும் இதற்கு இதுவரை மறுப்பு ஏதும் கூறவில்லை. எனவே அவர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இது பல்வேறு  ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கட்சி ரீதியாக அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்றும், அதன் விளைவாகத்தான் அவர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள ஊடகவியலாளர், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு நிர்வாக ரீதியாக அழுத்தம் ஏற்பட்டுள்ளது உண்மைதான் என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது, தேர்தல் நேரத்தின்போது தமிழகஅரசு ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மாநில அரசின்  நிதிநிலை மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அதை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு, கடமை நிதி அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனவே அவரின் முழு கவனமும் நிதி நிலைமையை சீர் செய்வதிலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என தகவல் வருகிறது. அவர் பதவியை ராஜனாமா செய்துவிட்டார் என்பது உண்மைதான். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு, அதாவது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு தனது மகன் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என தொடர்ந்து தலைமையை வற்புறுத்தி வந்திருக்கலாம், இரண்டு முறை எம்எல்ஏவான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருக்கே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக வென்று வந்துள்ள தனது மகனுக்கு இல்லையா? என அவர் முதல்வர் ஸ்டாலினை வற்புறுத்தி வந்திருக்கக்கூடும், அதனால் ஒரு புதிய அமைச்சர் பதவியை உருவாக்க முடியாது என்பதால் கட்சியில் ஒரு முக்கிய பதவியை கொடுக்க திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. அதன் விளைவாகத்தான் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளர் பதவியை பிடிஆரிடம் இருந்து வாங்கி, அதை டிஆர்பி ராஜாவுக்கு வழங்க முடிவு செய்திருக்க்கூடும் என சவுக்கு சங்கர் தனது பேட்டியில் கூறியுள்ளார். 
 

click me!