ஏழை எளிய மக்களுக்கான அரசு என்பதை நிரூபிக்கும் அதிமுக..!! இலவச டயாலிசிஸ் சென்டர்கள் அமைத்து அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 11, 2020, 6:40 PM IST
Highlights

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் மண்டலம் ஈஞ்சம்பாக்கம் பகுதியிலுள்ள நகர்ப்புற சமுதாய நல மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று துவக்கி வைத்தார். 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் மண்டலம் ஈஞ்சம்பாக்கம் பகுதியிலுள்ள நகர்ப்புற சமுதாய நல மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று துவக்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் மண்டலம் இஞ்சம்பாக்கம் பகுதியிலுள்ள நகர்புற சமுதாய நல மையத்தில் Freemasons Lodge Accountants No.194 (Charitable Trust) மூலம் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை ஆணையாளர் திரு.கே.பிரகாஷ் அவர்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு சிறுநீரக சுத்திகரிப்பு மையம் (டயாலிசிஸ் சென்டர்) அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். 

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 5 லட்சம் மக்களுக்கு ஒரு நகர்புற சமுதாய நல மையம் என மொத்தம் 16 நகர்புற சமுதாய நல மையங்கள் உள்ளன. இந்த சமுதாய நல மையங்களில் 100 படுக்கை வசதிகளுடன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை மற்றும் ஒருசில சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று 50,000 மக்கள் தொகைக்கு ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் என 144 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இலவசமாக இரத்த சுத்திகரிப்பு செய்யும் வகையில் 5 இடங்களில் ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரத்த சுத்திகரிப்பு நிலையங்களில் இதுவரை 35,610 நபர்கள் இலவசமாக சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். Freemasons Lodge Accountants No.194 (Charitable Trust) மூலம் இஞ்சம்பாக்கத்தில் 1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 10 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையம் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 

இங்கு ஒரு நாளைக்கு 20 நபர்களுக்கு இலவச ரத்த சுத்திகரிப்பு செய்ய  வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையங்களில், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் டேங்கர் பவுண்டேசன் இணைந்து பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) திரு.பி. மதுசூதனன், நகர மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா,  Lodge Accountants No.194 அமைப்பைச் சார்ந்த திரு. எம். கருப்பையா, தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி பவுண்டேஷன் அலுவலர் திருமதி லதா குமாரசாமி, தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி பவுண்டேஷனை சார்ந்த டாக்டர் ஜார்ஜ் ஆபிரகாம், பொது சுகாதாரம் மருத்துவ சேவைகள் துறை அலுவலர்கள் மற்றும் ரோட்டரி கிளப் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

click me!