எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காப்பாற்றி வைத்த அதிமுகவை பாஜகவுக்கு அடிமை சாசனமாக எழுதி வைத்துவிட்டார் இபிஎஸ். கலெக்ஷன், கரெப்ஷன், கமிஷன் ஆகியவற்றால்தான் அதிமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்டது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை ஏற்காத பல்வேறு திட்டங்களை ஏற்றவர் தான் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஈரோட்டில் நடந்த பொதுகூட்டத்தில் பச்சை பொய்களை கூறியிருப்பதாகவும், தோல்வி பயத்தில் மக்களின் மனதில் தேவையில்லாத குழப்பத்தைக் ஏற்படுத்தியிருக்கிறார்.என்றும்,10 ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒரு பகுதியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஈரோடுக்கு ஏதும் செய்யவில்லை. அவர் சொன்ன பொய்கள் எல்லாம் கேலிக்கூத்தானவை என குற்றம்சாட்டினார்.
undefined
இதையும் படிங்க;- கசாப்புக்கடைக்காரனை நம்பிப் போகலாம்.. காமுகனை நம்பி தான் போகக்கூடாது.. ஜெயக்குமாரை பங்கம் செய்த புகழேந்தி.!
எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆட்சியில் செய்யாத திட்டங்கள், கட்சிக்கு செய்த தூரோகங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. பாஜகவின் பேச்சை கேட்டு தமிழகத்திற்க்கு கெடுதல் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். நீட் விவகாரம், உதய் மின் திட்டத்தால் பாதிப்பு, மேகதாது அணை பிரச்சனையில் இணைக்கமாக சென்றது, விவசாயிகளுக்கு பல்வேறு தூரோகம் செய்தது..இப்படி பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கி கொண்டே போகலாம் எனவும் அவர் தெரிவித்தார்
ஊழலை பற்றி பேச அதிமுகவினருக்கு என்ன யோக்கிதை இருக்கிறது. அவர்களது ஆட்சியில் செய்த பல்வேறு ஊழல்களால் தான் மக்கள் அவர்களை தூக்கி எரிந்தாகவும் தெரிவித்த அவர், குட்கா பற்றி அவர் பேசுவதெல்லாம் வேடிக்கையாக இருப்பதாகவும், அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் விவாகரத்தில் பலர் சுட்டு கொல்லப்பட்டது,பொள்ளாச்சி பாலியல் விவாகாரத்தில் பல உண்மைகளை மூடி மறைத்து.இதையெல்லாம் மக்களுக்கு தெரியும்.எனவும் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
மேலும், பேசிய அவர் ஈரோட்டு இடைத்தேர்தலில் களத்தில் அதிமுக எத்தனை முகமூடிகள் போட்டாலும் இந்த தேர்தலோடு அதிமுக தூக்கி எரியப்படும். ஊழலை பற்றி பேச அவர்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். பல இடைத்தேர்தல்களில் அவர்கள் எல்லாம் செய்ததைக் நாங்கள் செய்ததாக சொல்கிறார்கள். திமுக அரசின் அமைச்சர்கள் ஈரோட்டில் கெடாவிருந்து நடத்துகிறார்கள் என்று சொல்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்..நான் தயிர் சாதம் தான் தற்போது சாப்பிட்டு தான் வந்தேன் என நகைப்புடன் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஈரோட்டில் பல திட்டங்களுக்கு முதற்கட்டமாக 300 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் படிபடியாக வேலைகளை செய்வோம். ஈரோடு வருங்காலத்தில் சீர்மிகு நகரமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் செய்த திட்டங்கள் ஏதுமில்லை என்பதால் ஈரோடு திண்டலில் எடப்பாடி பழனிச்சாமி தண்டால் எடுத்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நிதி பற்றாக்குறை 2177 கோடியாக குறைந்துள்ளதாகவும் வருவாய் பற்றாக்குறை 1472 கோடியாக குறைந்துள்ளதாகவும் கடந்த ஆட்சியை விட நிதி நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் அடிப்படை தொழில்நுட்ப கோளாறுகளை அதிமுக ஆட்சி சரி செய்திருக்க வேண்டும். அதிமுக அரசு திட்டத்தை கொண்டு வந்திருந்தாலும் திமுக அரசு அதை கைவிடவில்லை. அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் தாமதத்துக்கு அதிமுக ஆட்சியே காரணம்.
இதையும் படிங்க;- எழுதாத பேனாவை நினைவு சின்னமாக வைப்பதற்கு பதில் இதை செய்யலாம்.. ஆளுங்கட்சியை எகிறி அடிக்கும் இபிஎஸ்..!
அதேபோல் கூட்டணி தர்மத்தை மதித்து அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர், அதிமுகவை போல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய தொகுதியைக் பறித்து கொண்டு நாங்கள் நிற்கிறோம் என்ற உணர்வில் நாங்கள் இல்லை. திமுகவிற்க்கு எந்த காலத்திலும் தோல்வி பயமில்லை எனவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு இடத்தில் பெகாஸஸ் என்கிற முறையில் இரட்டை இலை சின்னத்தை, கிரேக்க தொண்மையின் அடையாளத்தில் குதிரையின் அடையாளம் எனக் கூறி நினைவு சின்னம் அமைத்தார்களே அது அவர்களது கட்சியின் நிதியிலா வைக்கப்பட்டது என பேனா நினைவு சின்னம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்கு தங்கம் தென்னரசு பதிலளித்தார்.