அதிமுக திரும்பவும் ஆட்சிக்கு வரும்.. அப்போ திமுகவினருக்கு இருக்கு.. மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்.!

Published : Feb 28, 2022, 08:55 PM IST
அதிமுக திரும்பவும் ஆட்சிக்கு வரும்.. அப்போ திமுகவினருக்கு இருக்கு.. மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்.!

சுருக்கம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியை விரட்டி அடிக்க வேண்டும் எனத் தொடங்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக . மீண்டும் அதிமுக தமிழகத்தை ஆளும். அப்போது திமுக இன்று செய்வதற்கு எதிர்வினையை அனுபவிப்பார்கள். 

என்னை கைது செய்ய வாருங்கள்; அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விடுவிக்கக் கோரியும் அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், “ஆட்சிப் பொறுப்புக்கு திமுக வந்த பிறகு ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய பணிகளை மறந்துவிட்டார். அதிமுகவை எப்படி அழிக்கலாம் என்றே 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அப்படி அவர் வகுத்த திட்டப்படித்தான் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது கைது செய்வது போன்ற நிகழ்வுகள் ஆகும். இப்படிச் செய்தால் அதிமுகவை அழித்துவிடலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார்.

திமுகவை அழிக்க வேண்டும் என்று ஜெயலலிதா நினைக்கவில்லை.  திமுக பிளவுப்பட்டபோது அண்ணா சாலையில் வைகோ நடத்திய ஊர்வலத்துக்கு ஜெயலலிதா தடை விதித்தார். அப்படி தடை விதிக்காமல் இருந்திருந்தால், வைகோ அறிவாலயத்தைக் கைப்பற்றியிருப்பார். அப்போதே திமுக அழிந்து போயிருக்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல எங்களுக்கு பெருந்தன்மையெல்லாம் கிடையாது. முன்னாள் முதல்வர் கருணாநிதியை விரட்டி அடிக்க வேண்டும் எனத் தொடங்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக . மீண்டும் அதிமுக தமிழகத்தை ஆளும். அப்போது திமுக இன்று செய்வதற்கு எதிர்வினையை அனுபவிப்பார்கள். 

திமுக அரசு செய்கிற தவறுகளை சுட்டிக்காட்டிய ஜெயக்குமாரை கைது செய்திருக்கிறார்கள்.  கைதுகளுக்கு அதிமுக என்றுமே அஞ்சியது கிடையாது.  பலமுறை சிறையைப் பார்த்தவர்கள்தான் அதிமுகவினர். என்னை கைது செய்ய வாருங்கள். அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறை, திமுகவின் தொண்டர் படையாக மாறியிருக்கிறது. நடந்து முடிந்த  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளவில்லை. திண்டிவனத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர், ஓட்டுக்கு 10 ஆயிரம் வரை வழங்கியுள்ளார். திமுகவினரின் வன்முறைக்குப் பயந்துதான் சென்னையில் 50 சதவீத மக்கள் வாக்களிக்கவே வரவில்லை. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரனோவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஒதுக்கப்பட்ட நேரத்தில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டார்கள். அதனை தடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்திருக்கிறார்கள்” என்று சி.வி.சண்முகம் பேசினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!