அதிமுகவின் மெகா கூட்டணி... போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

By vinoth kumar  |  First Published Mar 17, 2019, 10:38 AM IST

மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளனர். 


மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளனர். அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெறுள்ள பாஜக, பாமக, தேமுதிக  உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

Tap to resize

Latest Videos

ஏப்ரல் 11 தேதி மக்களவை தேர்தல் பல்வேறு மாநிலங்களில் தொடங்க உள்ளது.  ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் எங்கு போட்டியிடும், திமுகவுடன் எங்கு நேரடியாக களமிறங்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அதிமுகவின் 20 தொகுதிகள்:

1. சேலம்

2. நாமக்கல்

3. கிருஷ்ணகிரி 

4. ஈரோடு

5. கரூர்

6. திருப்பூர்

7. பொள்ளாச்சி

8. ஆரணி

9. திருவண்ணாமலை

10. சிதம்பரம்(தனி)

11. தேனி 

12. மதுரை

13. காஞ்சிபுரம்(தனி)

14. தென்சென்னை

15. நீலகிரி(தனி)

16. நெல்லை

17. நாகப்பட்டினம்

18. மயிலாடுதுறை

19. திருவள்ளூர்(தனி)

20. பெரம்பலூர்

பா.ம.க.வின் 7 தொகுதிகள்;

1. தர்மபுரி - சவுமியா அன்புமணி

2. அரக்கோணம்

3. ஸ்ரீபெரும்புதூர் 

4. விழுப்புரம் (தனி) 

5. கடலூர் 

6. மத்திய சென்னை 

7. திண்டுக்கல்

பா.ஜ.க.வின் 5 தொகுதிகள்;

1. தூத்துக்குடி 

2. கன்னியாகுமரி

3. சிவகங்கை 

4. கோவை

5. ராமநாதபுரம் 

தே.மு.தி.க.வின் 4 தொகுதிகள்;

1, வடசென்னை 

2. கள்ளக்குறிச்சி

3. திருச்சி 

4. விருதுநகர் 

த.மா.கா. தொகுதி

1. தஞ்சாவூர் - ரங்கராஜன்

புதிய நீதிக்கட்சி தொகுதி

1.வேலூர் - ஏ.சி.சண்முகம்

புதிய தமிழகம் தொகுதி

1. தென்காசி - டாக்டர் கிருஷ்ணசாமி.

என்.ஆர்.காங்கிரஸ்

1. புதுச்சேரி

click me!