மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5 , பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதிகள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் உத்தேசமாக வெளியாகியுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
பா.ம.க.வின் 7 தொகுதிகள்;
தர்மபுரி - சவுமியா அன்புமணி
அரக்கோணம் - ஏ.கே.மூர்த்தி
ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் வைத்திலிங்கம்
விழுப்புரம் (தனி) - வடிவேல் ராவணன்
கடலூர் - டாக்டர் சுந்தர்ராஜன்
மத்திய சென்னை - சாம் பால்
திண்டுக்கல் - சீனிவாசன்
பா.ஜ.க.வின் 5 தொகுதிகள்
தூத்துக்குடி - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன்
சிவகங்கை - எச்.ராஜா
கோவை - சி.பி.ராதாகிருஷ்ணன் அல்லது வானதி சீனிவாசன்
ராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன் அல்லது குப்புராம்.
தே.மு.தி.க.வின் 4 தொகுதிகள்;
வடசென்னை - மோகன்ராஜ்
கள்ளக்குறிச்சி- எல்.கே.சுதீஷ்
திருச்சி - டாக்டர் இளங்கோவன்
விருதுநகர் - அப்துல்லா சேட்
த.மா.கா.
தஞ்சாவூர் - ரங்கராஜன்
புதிய நீதிக்கட்சி
வேலூர் - ஏ.சி.சண்முகம்
புதிய தமிழகம்
தென்காசி - டாக்டர் கிருஷ்ணசாமி.