
அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஜூன் 12 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒ.பி.எஸ் அணியும் டி.டி.வி தினகரன் அணியும் நாங்கள்தான் உண்மையான அதிமுக எனவும், எனவே எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்தனர்.
இதனால் குழப்பத்தில் ஆழ்ந்த தேர்தல் ஆணையம் இரட்டை யாளி சின்னத்தை முடக்கியது.
இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் கைப்பற்ற அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் முயற்சித்துள்ளார்.
தொடர்ந்து டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார். இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் ஜாமீன் கேட்டு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இருவரது காவல் இன்றுடன் முடிவடைவதைத் தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அவர்களது காவலை வருகிற ஜூன் 12-ந் தேதி வரை மேலும் நீடித்து நீதிபதி உத்தரவிட்டாரர்.
இதேபோல் டி.டி.வி. தினகரனின் உதவியாளர் மல்லிகார்ஜூனா காவலும் ஜூன் 12-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.