அடிச்சுத்தூக்கும் அதிமுக கூட்டணி... தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பால் ஒட்டுமொத்தமாக திரும்பிய தேர்தல் களம்..!

By Thiraviaraj RMFirst Published Feb 18, 2021, 4:57 PM IST
Highlights

பா.ஜ.க உடனான ஒப்பந்தம் வருகிற 21-ம் தேதி டெல்லியிலும், மற்ற கட்சிகளுடன் 24-ம் தேதி சென்னையிலும் கையெழுத்தாகும் என்று அ.தி.மு.க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து, அந்த மக்கள்`தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்கப்படுவார்கள் என்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. பிரதமர் மோடி சென்னை வரும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு தமிழகத்தில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.

 

இந்நிலையில், புதிய தமிழகம் கட்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகள் அதிமுக- பாஜக கூட்டணியில் ஒத்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை அதிமுக அறிவித்தால் மட்டுமே கூட்டணி. தங்களது கோரிக்கையை அதிமுக ஏற்காமல் ஏமாற்றி வருவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறி வந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி தேவேந்திரகுல வேளாளர் என்கிற அறிவிப்பை வெளியிட்ட உடன் அந்த 7 பிரிவுகளை சேர்ந்த சமுதாய மக்கள் மனம் மாறி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து புதியதமிழகம் கட்சிக்கு அ.தி.மு.க- பாஜக கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 6 இடங்களை ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில், கிருஷ்ணசாமி கட்சியும், தமிழ் மாநில காங்கிரஸ் வாசன் கட்சியும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க உடனான ஒப்பந்தம் வருகிற 21-ம் தேதி டெல்லியிலும், மற்ற கட்சிகளுடன் 24-ம் தேதி சென்னையிலும் கையெழுத்தாகும் என்று அ.தி.மு.க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

click me!