தன் தவறை மறைக்க அதிமுக மீது பாயக்கூடாது – ஸ்டாலினுக்கு தினகரன் எச்சரிக்கை...

Asianet News Tamil  
Published : Mar 08, 2017, 06:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
தன் தவறை மறைக்க அதிமுக மீது பாயக்கூடாது – ஸ்டாலினுக்கு தினகரன் எச்சரிக்கை...

சுருக்கம்

AIADMK to hide her mistake and say the less - Stalin News Alert

முல்லை பெரியாறு, கச்சத்தீவு பிரச்சனைகளில் திமுக தன் தவறை மறைக்க அதிமுக மீது பாயக்கூடாது என அதிமுக துணை செயலாளர் டி.டிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு முல்லை பெரியாறு, கச்சத்தீவு பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமையை அதிமுக காவு வாங்கி விட்டதாக ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்டாலின் பேச்சிற்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

முல்லைப்பெரியாறு மற்றும் கச்சத்தீவு விவகாரங்களில் தமிழகத்தின் உரிமையை அதிமுக காவு கொடுத்து விட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் இந்த விவகாரங்களில் தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்.

முல்லை பெரியாறு, கச்சத்தீவு பிரச்சனையில் திமுக தான் தமிழகத்தை ஏமாற்றிவிட்டது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?