"நீதி விசாரணை நடந்தால் விஜயபாஸ்கர்தான் முதல் குற்றாவாளி" - பகீர் கிளப்பும் ஓ.பி.எஸ்

Asianet News Tamil  
Published : Mar 08, 2017, 05:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
"நீதி விசாரணை நடந்தால் விஜயபாஸ்கர்தான் முதல் குற்றாவாளி" - பகீர் கிளப்பும் ஓ.பி.எஸ்

சுருக்கம்

CBI inquiry into jaya death and lead to the first criminal action of the minister jayakumar

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் முதல் குற்றவாளியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் சிக்குவார் என பன்னீர்செல்வம் அதிரடியாக தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஓ.பி.எஸ் தரப்பினர் தமிழகம் முழுவதும் 33இடங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒருபகுதியாக சென்னையில் ஓ.பி.எஸ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் நிறைவில் பன்னீர்செல்வம் பேசியதாவது:

எம்.ஜி.ஆர் கட்டி காத்தபோது இந்த இயக்கம் மக்களாட்சியாக தான் திகழ்ந்தது. ஜெயலலிதாவும் இந்த ஆட்சி மக்களாட்சியாக இருக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் நீண்டு கொண்டே போகிறது.

நீதி விசாரணை நடத்தபட்டால் தான் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் களையும்.

நான் நீண்ட நாட்களாக ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன்.

இந்நிலையில் விஜயபாஸ்கர் சொல்கிறார். நான் உண்மைக்கு மாறாக பேசுகிறேன் என்றும் நீதி விசாரணை அமைக்கபட்டால் நான் தான் முதலில் மாட்டுவேன் என்றும் கூறியுள்ளார்.

நான் தான் சொல்கிறேன் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று. சி.பி.ஐ வரட்டும், விசாரிக்கட்டும், நான் அனைத்து தகவல்களையும் தருகிறேன்.

அவ்வாறு விசாரிக்கபட்டால் ஜெயலலிதா மரணத்தில் முதல் குற்றவாளி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான்.

எனக்கு மாலை 4 மணிக்கு ஜெயலலிதா இறந்து விட்டதாக தகவல் வந்தது. நான் மருத்துவமனைக்கு சென்றேன்.

அங்கு அம்மா இறந்து விட்டார்கள் என எனக்கு தகவல் வந்தது என கேட்டேன். அதற்கு விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தான் தகவல் கொடுத்தனர். அப்படியே நேரத்தை வளர்த்திவிட்டு அம்மா இறந்ததாக தான் தெரிவித்தனர்.

நிச்சயம் நீதி விசாரணை நடத்தும்வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு ஓ.பி.எஸ் பேசினார்.

 

PREV
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?