
பொய் பேசும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடுப்பேன் என ஓ. பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசியுள்ளார்.
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என கோரி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஓபிஎஸ் பேசினார்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கையில் அதிமுக சிக்கி கொண்டு தவிக்கிறது.ஆனால் தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் கையில் கட்சி சென்று விடக்கூடாது என்பதில் ஜெ. உறுதியாக இருந்தார்.
ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக சசிகலா குடும்பம் அதிமுகவை கபளீகரம் செய்ய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருகிறது என ஆவேசமாக பேசினார்.
எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை செய்தியாளர்களிடம் வெளியிட்டு பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார் என ஓபிஎஸ் தெரிவித்தார்.
ஜெ. சிகிச்சை தொடர்பான அனைத்து விசயங்களையும் ஓபிஎஸ்சிடம் அவ்வப்போது தெரிவித்து வந்ததாக ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்த தவறான தகவலை கூறியுள்ள அரசு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது நிச்சயம் வழக்கு தொடுப்பேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
எனவே தான் கூறிய பொய் வார்த்தைகளை ராதாகிருஷ்ணன் திரும்ப பெற வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
நீதி விசாரணை நிச்சயம் நடத்தப்படும், நீதி விசாரணை கோரும் வரை தொடர்ந்து போராட்டம் தொடரும் என ஓபிஎஸ் கூறினார்.
சசிகலா - ஓபிஎஸ் இடையே நடக்கும் இந்த அதிகார சண்டையின் முடிவில் பல ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் அரசு உயரதிகாரிகள் தலைகள் உருளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.