ஸ்டாலினுக்கு தோளோடு தோள் நின்ற அதிமுக.. அனைத்து கட்சி கூட்டத்தை நெகிழவைத்த விஜயபாஸ்கர்.

By Ezhilarasan BabuFirst Published Jan 8, 2022, 12:11 PM IST
Highlights

சட்டத்தை நிறைவேற்றும் போது ஆளுநர் மதித்தி ஒப்புதல் அளிப்பது தான் மக்களாட்சியின் தத்துவம். நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனபதே அனைவரின் இலக்கு. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது என்றும், எனவே நீட்தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை  நிற்கும் என்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் தவறான முடிவு எடுப்பதை தவிர்க்க உளவியல் பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

நீட் தேர்வி விலக்கு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் திமுக சார்பில் -  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக - விஜயபாஸ்கர், காங்கிரஸ் - செல்வபெருந்தகை, விசிக - சிந்தனைச் செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி - ஜி.கே.மணி, பாரதி ஜனதா கட்சி - வானதி சீனிவாசன், புரட்சி பாரதம் - பூவை ஜெகன் மூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி -  ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி - வேல்முருகன், மதிமுக - சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் - தளி ராமசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - நாகை மாலி உள்ளிட்ட 13 கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதற்கு தலைமையேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிராக உள்ளது என உரையாற்றினார்.

 

மேலும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பிரதமரை கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வலியுறுத்தி உள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். ஆனால் அந்த சட்ட முன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார். சட்டத்தை நிறைவேற்றும் போது ஆளுநர் மதித்தி ஒப்புதல் அளிப்பது தான் மக்களாட்சியின் தத்துவம். 

நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனபதே அனைவரின் இலக்கு. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம். வரைவு தீர்மானத்தின் மீது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பிரதிநிதிகள் வழங்க வேண்டும். என்றார் அப்போது எழுந்து உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சி. விஜய பாஸ்கர், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைபாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் தேர்வு விவகராத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும், நீட் தேர்வு விலக்கு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் நீட் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் தவறான எண்ணங்களுக்கு செல்வதை தவிர்க்க உளவியல் பயிற்சிகள் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 
 

click me!