#BREAKING : தேர்தல் எப்போது..? மதியம் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..

By Raghupati RFirst Published Jan 8, 2022, 11:57 AM IST
Highlights

5 மாநில தேர்தல் தேதி இன்று பிற்பகல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவத்தினர் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. ஐந்து மாநிலங்களிலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசார பணிகளை ஏற்கனவே துவக்கிவிட்டன. பொதுக் கூட்டங்களில் மக்கள் திரளாக கூடத் துவங்கி உள்ளனர்.'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களை ஒத்திவைக்கும்படி சுகாதாரத்துறை நிபுணர்கள் பரிந்துரைத்தனர். 


 

'ஆனால் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான வாய்ப்பு குறைவு' என, தகவல் வெளியாகி உள்ளது. திட்டமிட்டபடி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி 5 மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3.30மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

click me!