அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு.. கேள்விகளால் துளைத்த வானதி.. ஆடிப்போன ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Jan 8, 2022, 11:49 AM IST
Highlights

அதனால் அதிக அளவில் மாணவர்கள் மருத்துவ இடங்களுக்கு செல்கின்றனர். தமிழகத்தில் மாணவர்கள் கடந்த ஆண்டை விட தற்போது தேசிய சராசரியை விட அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே மாணவர்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், அனைத்து பழிகளையும் மாணவர்கள் மீது போட்டு அரசியல் கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. 

தேர்வில் இருந்து விலக்கு கோரும் அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. நீட் தேர்வு விலக்கு கோரும் தீர்மானத்தில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை என்றும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பின் வெளியடப்பு செய்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வி விலக்கு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் திமுக சார்பில் -  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், 

அதிமுக - விஜயபாஸ்கர், காங்கிரஸ் - செல்வபெருந்தகை, விசிக - சிந்தனைச் செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி - ஜி.கே.மணி, பாரதி ஜனதா கட்சி - வானதி சீனிவாசன், புரட்சி பாரதம் - பூவை ஜெகன் மூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி - வேல்முருகன், மதிமுக - சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் - தளி ராமசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - நாகை மாலி உள்ளிட்ட 13 கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதற்கு தலைமையேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிராக உள்ளது என உரையாற்றினார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது என்பது 100% உண்மைக்குப் புறம்பான ஒன்று, சமூகநீதிக்கு எள் முனை அளவு கூட நீட் தேர்வினால் பாதிப்பு இல்லை,  நீட் தேர்வு வந்த பிறகுதான் அதிக பட்டியலின மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில உரிமையை மத்திய அரசு பறிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது,  நீட் தேர்வுக்கு முன்பாக 30 முதல் 40 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர். ஆனால் நீட் தேர்வுக்கு பின்னரும், கடந்த அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியதன் காரணமாகவும் 250க்கும் அதிகமான அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் மருத்துவ கல்வியில் இடம் பிடித்துள்ளனர். நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட போது ஆரம்ப கட்டத்தில் அதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இப்போது அனைத்து குளறுபடிகளும் கலையப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அந்தந்த தாம் மொழிகளிலேயே மாணவர்கள் தேர்வு எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் அதிக அளவில் மாணவர்கள் மருத்துவ இடங்களுக்கு செல்கின்றனர். தமிழகத்தில் மாணவர்கள் கடந்த ஆண்டை விட தற்போது தேசிய சராசரியை விட அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே மாணவர்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், அனைத்து பழிகளையும் மாணவர்கள் மீது போட்டு அரசியல் கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் எந்தெந்த அரசியல் கட்சியினர் மருத்துவக் கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்னர் அவர்கள் பெற்றுக்கொண்டிருந்த மருத்துவக் கட்டணம், மற்றும் நன்கொடைகள் எவ்வளவு என்பதை அரசு வெளியிட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் எந்த வரையறையும் இல்லாமல் கட்டணக் கொள்ளை நடத்திக் கொண்டிருந்த நிலையில் நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு அதை தடுத்து நிறுத்தியுள்ளது. பழங்குடியின மாணவர்கள் எந்த கோச்சிங்கிற்கோ அல்லது பயிற்சிக்கும் செல்லாமல் நீட் தேர்வில் வெற்றிபெற்று தங்களது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்  கூறினார். 
 

click me!