
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தடுக்கும் விதமாக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கிட்டில் புது வியூகத்தை வகுத்திருக்கிறது திமுக தலைமை. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் 66 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றார்கள். 2026 சட்டமன்றத்தேர்தலில் இந்த எண்ணிக்கையை 30-க்குள் முடக்க திமுக தலைமை வியூகம் வகுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற 66 தொகுதிகளில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் போட்டியிட்ட இரண்டு தொகுதிகள்தான் வெற்றி பெற்றது. அந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களே எதிர்த்து களமிறங்கினர். ஆகையால் மீதமுள்ள எட்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
அதேபோல் விசிக போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று. மற்ற இரண்டு தொகுதிகளில் அதிமுகவிடம் வந்தது. இதேபோல காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் தோல்வியை தழுவ, அந்த தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றியது. சென்ற முறை கூட்டணி கட்சிகள் தோல்வியடைந்த தொகுதிகளில் திமுகவே இப்போது களமிறங்க முடிவு செய்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கவும் திட்டம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது திமுக. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், மற்ற கூட்டணிக்கட்சிகளுக்கு மொத்தம் 40 தொகுதிகளும், விசிகவுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட தொகுதிகளைவிட இரண்டு தொகுதிகளை கூடுதகாக கொடுக்க திமுக தலைமை முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மதிமுக, இதர கட்சிகளை 2021 போலவே உதயசூரியனில் போட்டியிட வைக்கும் முடிவையும் திமுக தலைமை எடுத்திருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.