தவெகவுக்கு ஷாக்..! அதிமுகவுக்கு திரும்பும் செங்கோட்டையனின் 12 ஆதரவாளர்கள்..! அதிரடியாக களமிறங்கிய இபிஎஸ்..!

Published : Nov 29, 2025, 01:11 PM IST
Edappadi Palaniswami

சுருக்கம்

தவெகவில் செங்கோட்டையனுடன் இணைந்த 32 பேரில் 12 பேர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

செங்கோட்டையன் கட்சி மாறிவிட்டார் என்று சமூக வலைதள பரபரப்புகளைத் தாண்டி மெகா உற்சாகத்தில் இருக்கிறது கோபிச்செட்டிபாளையம். காரணம் நவம்பர் 30ம் தேதி சத்தியமங்கலம் - கோபிச்செட்டிப்பாளையம் நெடுஞ்சாலையில், நல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துமஹால் திருமண மண்டப திடலில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணத்தின் தொடர்ச்சியாக சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

அதில், தவெகவில் செங்கோட்டையனுடன் இணைந்த 32 பேரில் 12 பேர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கோபியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘கோபியில் அதிமுக சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இந்த இடத்துக்கு தனி அரசியல் வரலாறு இருக்கிறது. அதாவது, 1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதும், கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் எம்ஜிஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது. இதையடுத்து 1980 மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இந்த இடத்தில்தான் பிரசாரம் மேற்கொண்டார்.

‘என்ன தவறு செய்தேன். ஏன் கலைத்தார்கள் ஆட்சியை?’ என்று ஒரே ஒரு கேள்வி கேட்டார். மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக முதல்வராகப் பதவி ஏற்று வரலாற்று சாதனை படைத்தார். எம்ஜிஆருக்குப் பின் இந்த இடத்தில் இதுவரை வேறு யாரும் தேர்தல் பிரசாரமோ அல்லது பொதுக்கூட்டமோ நடத்தியதில்லை. கோபியில் பொதுக்கூட்டம் நடத்தி எப்படி எம்.ஜி.ஆர். இரண்டாவது முறை முதல்வராகப் பதவி ஏற்றாரோ, அதே ஃபார்முலாவில் இங்கே பொதுக்கூட்டம் நடத்தி இரண்டாம் முறையாகப் பதவி ஏற்கப்போகிறார் எடப்பாடியார் என்று அதிமுகவினர் குஷியாக விழா ஏற்பாடுகளைக் கவனிக்கிறார்கள்.

அதிமுகவுக்கும், இரட்டை இலைக்கும் மக்களிடம் மதிப்பு இருக்கிறதே தவிர, தனிப்பட்ட மனிதருக்கு செல்வாக்கு கிடையாது என்பதை செங்கோட்டையன் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் அனுபவம் கொண்டவர். ஆகவே, செங்கோட்டையன் தவெகவில் சேரும்போது, அதிமுகவிலிருந்து மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை அளவில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று தவெக தரப்பில் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்காக அக்கட்சியின் பனையூர் அலுவலகத்திலும் திருமண மண்டபங்களிலும் தடபுடலாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால், ஒரே ஒரு பஸ்ஸில் 32 பேர் மட்டுமே செங்கோட்டையனுடன் தவெகவில் இணைந்தனர். இவர்கள் எல்லோருமே கட்சி நடவடிக்கைக்கு ஆளாகி அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள். இப்போது, பொறுப்பில் இருக்கும் வட்டச் செயலாளர், கிளைச்செயலாளர், நகரச் செயலாளர் என ஒருவர் கூட செங்கோட்டையனை நம்பிச் செல்லவில்லை. 50 பேரையாவது விஜய் கட்சிக்கு கூட்டிச் சென்றுவிட வேண்டும் என்று செங்கோட்டையன் கடுமையாக முயற்சி செய்தாலும், ஒரே ஒரு கவுன்சிலரைக் கூட அவரால் கூட்டிச் செல்ல முடியவில்லை. அதனால் செங்கோட்டையனுடன் சென்றவர்களுக்கு விஜய் அலுவலகத்தில் எந்த மதிப்பும், மரியாதையும் தரப்படவில்லை. அதோடு செங்கோட்டையன் பேட்டி கொடுத்த நேரத்தில் அவருடன் வந்த சத்தியபாமா எம்.பி.க்குக்கூட சேர் கொடுக்காமல் அவமதிப்பு செய்தார்கள். இப்படிப்பட்டவரைநம்பி வந்துவிட்டோம் என்ற மனநிலையை செங்கோட்டையன் ஆதரவாளர்களிடம் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் 30ம் தேதி இபிஎஸ் நடத்தும் பொதுக்கூட்டம் மெகா சக்சஸ் ஆகிவிட்டால் தனது அரசியலுக்குச் சிக்கல் என்பதால் நேரடியாக கோபிசெட்டிப்பாளையம் வந்திருக்கும் செங்கோட்டையன் பல நிர்வாகிகளிடம் கெஞ்சத் தொடங்கியிருக்கிறார். செங்கோட்டையன் போன் செய்தால் அதிமுகவினர் யாரும் எடுப்பதில்லை என்பதால் வேறு எண்ணில் இருந்து பேசும் செங்கோட்டையன் விஜய் கட்சியில் பெரிய பதவி என்று ஆசை காட்டி பேசியும் யாரும் மசியவில்லை. அதேநேரம் செங்கோட்டையனுடன் விஜய் கட்சி மாறிய 32 பேரில் 12 பேர் வரும் 30ம் தேதி மீண்டும் அதிமுகவில் இணைவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்கு எடப்பாடியார் இன்னமும் அனுமதி கொடுக்கவில்லை. அவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்துவிட்டால் செங்கோட்டையனின் ஒட்டுமொத்த இமேஜும் டேமேஜ் ஆவது உறுதி.

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் அவரது கூட்டங்களில் தவெக தொண்டர்கள் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்டனர். அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது மட்டுமே இயல்பான கூட்டணி என்று தவெகவினர் ஆர்வமாக காத்திருந்தனர். செங்கோட்டையனை இப்போது கட்சிக்குள் சேர்த்திருப்பதால் அந்த வாய்ப்பு குறைந்துவிட்டதாக தவெகவினர் கவலைப்படுகிறார்கள். குறிப்பாக கோபி தொகுதியில் இருக்கும் தவெக நிர்வாகிகள் அனைவரும் கடும் அப்செட்.

கடந்த 50 ஆண்டுகாலம் கோபி தொகுதியில் மற்ற யாரையும் வளர விடாமல் தான் செங்கோட்டையன் மட்டுமே 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் தவெகவில் நுழைந்ததன் மூலம் தங்கள் வாய்ப்பு பறிபோனது என்று தவெக நிர்வாகிகள் வருந்துகிறார்கள். செங்கோட்டையனுக்கு இங்கு செல்வாக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தான் இங்கு ஆதரவு என்பதை 30ம் தேதி பொதுக்கூட்டம் உணர்த்தப்போகிறது’’ என்கிறார்கள்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு
உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்