கருணாஸை அடுத்து அதிமுகவுக்கு அதிர்ச்சி... தமிமுன் அன்சாரி எடுத்த திடீர் முடிவு..!

Published : Mar 08, 2021, 01:29 PM IST
கருணாஸை அடுத்து அதிமுகவுக்கு அதிர்ச்சி... தமிமுன் அன்சாரி எடுத்த திடீர் முடிவு..!

சுருக்கம்

அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ் விலகி திமுகவுக்கு ஆதரவளித்துள்ள நிலையில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ் விலகி திமுகவுக்கு ஆதரவளித்துள்ள நிலையில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த முறை கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் அதிமுகவும் திமுகவும் தங்களது தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது. இதனிடையே, கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி அங்கிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸால் அறிவிக்கப்பட்டது. அதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரியும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்.

 முக்குலத்தோர் புலிப்படை கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் அஜய் வண்டையார், திமுகவின் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் வழங்கினார். இந்நிலையில், கருணாஸை தொடர்ந்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கூடுதலாக ஒரு தொகுதியை திமுகவிடம் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

PREV
click me!

Recommended Stories

திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
கொளத்தூரில் ஸ்டாலினுக்கு சிம்மசொப்பனம்..! கோட்டை விட்ட இபிஎஸ்... கொத்தாய் தூக்கிய விஜய்..!