சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகவும் அதிகளவில் சொத்து குவித்து உள்ளதாகவும் அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு என்பவர் கூறியிருந்தார்.
அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகவும் அதிகளவில் சொத்து குவித்து உள்ளதாகவும் அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு என்பவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஏ.வி.ராஜு என்பவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கலங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் சேலம் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.