மு.க.ஸ்டாலின் மருமகன் மூலமாக அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயற்சி... அமைச்சர் பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published May 10, 2019, 4:40 PM IST
Highlights

மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மூலமாக அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கற்பனைக் கோட்டை கட்டுவதில் திமுகவிற்கு நிகர் யாரும் இல்லை. மத்திய காங்கிரஸ் ஆட்சி வந்தாலும் இந்த மாநிலத்தில் அதிமுக ஆட்சியை அசைத்துக்கூட பார்க்க முடியாது.

எத்தனை மு.க.ஸ்டாலின், தினகரன் வந்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜைன கோவிலின் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரின் விடுதலை விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியும், திமுகவும் முரண்பாடு கொண்டிருப்பதாக விமர்சித்தார். இவ்விஷயத்தில், பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல் என்ற வேலையைத்தான் திமுக செய்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மூலமாக அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கற்பனைக் கோட்டை கட்டுவதில் திமுகவிற்கு நிகர் யாரும் இல்லை. மத்திய காங்கிரஸ் ஆட்சி வந்தாலும் இந்த மாநிலத்தில் அதிமுக ஆட்சியை அசைத்துக்கூட பார்க்க முடியாது. 50,000 வாக்குச்சாவடிகளில் 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு என்பது பிரச்னைக்குரிய விவகாரம் இல்லை. ஊடகங்கள் தான் அதனை பெரிதுபடுத்தி வருகின்றன.

 

7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் ஏற்கவில்லை என்பது கூறிவது தவறு. இந்த விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. தமிழக அரசில் தரப்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். மத்திய அமைச்சர் பிராகாஷ் ஜவ்டேகர் கருத்து குறித்த பதிலளித்த அவர், பாஜகவின் கொள்கையினை அமைச்சர் தெரிவித்திருக்கக்கூடும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

click me!