முடிசூட்டிவிட்டார் முதல்வர்; இவர்கள் என்ன ராஜபரம்பரையா? ஸ்டாலினை கலாய்த்த எடப்பாடி

By Velmurugan s  |  First Published Dec 28, 2022, 5:37 PM IST

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனுக்கு முடிசூட்டிவிட்டதா சிலர் கூறுகின்றனர். முடிசூட்டுவதற்கு அவர்கள் என்ன ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்களா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
 


கொங்கு இளைஞர் பேரவை மற்றும் கொங்குநாடு தேசிய கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சேலத்தில் இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழக முதல்வர் அவரது மகனுக்கு முடி சூட்டிவிட்டதாக கூறுகிறார்கள். முடி சூட்ட இவர்கள் என்ன ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்களா? கருணாநிதி குடும்பத்தினர் அன்றிலிருந்து தற்போது வரை திட்டம்போட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள்; கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

Latest Videos

உதயநிதி மட்டுமல்ல அவரது மகனுக்கும் வாழ்க என்று கூறுவோம் என சொல்லும் அமைச்சர் கே.என்.நேருவின் அடிமைத் தனத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இதுபோன்ற அமைச்சர்களை வைத்துக் கொண்டு மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும்? கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே நன்மை கிடைக்கும்.

பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்க முதல்வர் உத்தரவு

நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது அதிக தார் சாலைகள் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தேன். நான் பெற்ற பிள்ளைகளுக்கு திமுக பெயர் வைத்து வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்த போது திமுக எட்டு வழிச்சாலையை எதிர்த்தது. ஆனால், தற்போது அமைச்சர் எ.வா.வேலு எட்டுவழிச் சாலை வேண்டும் என்று கூறிகிறார். 

இந்தியாவிலேயே எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு நாம் கொடுக்கும் இழப்பீட்டு தொகையை யாராலும் கொடுக்க முடியாது என்று பேசினார்.

click me!