நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்று எச்சரித்துள்ள மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு தயாராகுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திமுகவில் இளைஞரணி, மாணவரணி, விவசாய அணி என பல்வேறு அணிகள் உள்ள நிலையில், அனைத்து அணி நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின் போது அணி நிர்வாகிகளின் பணியை ஆய்வு செய்வதற்காக ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, பென்முடி ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்து ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இணைய பிரகாசமான வாய்ப்பு - கார்த்தி சிதம்பரம் ஆரூடம்
இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில், ஸ்டாலின் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்குங்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜகவினர் எந்தவொரு செயலையும் செய்யத் தயங்கமாட்டார்கள். அவர்களை எதிர்கொண்ட தொண்டர்கள், நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கடலூரில் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதல்; நூற்றுக்கணக்கில் செத்து மடிந்த உயிர்கள்
மேலும் கட்சியில் அணிகள் வழங்கும் பொறுப்புகளை கௌரவமாகக் கருதாமல் முழுமையாக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு அணியின் செயல்பாடும் பாராட்டத்தக்க வகையில் இருக்க வேண்டும். அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து தேர்தலில் கட்சி வெற்றி கனியை ஈட்டுவதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.