திமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்..! திடீர் என ஒத்திவைத்த எடப்பாடி..! என்ன காரணம் தெரியுமா..?

By Ajmal KhanFirst Published Dec 8, 2022, 11:18 AM IST
Highlights

திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த அதிமுக தலைமைகழகம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் புயல் காரணமாக நாளை பேரூராட்டி பகுதிகளல் நடைபெற இருந்த  போராட்டம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது
 

திமுகவிற்கு எதிராக போராட்டம்

திமுக அரசுக்கு எதிராக அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என ஒவ்வொரு பகுதி வாரியாக போராட்டம் நடத்த எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் போராட்டம் தொடர்பாக அதிமுக தலைமை அலுலவகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்த செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விடியா தி.மு.க. அரசைக் கண்டித்தும்; உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் 9.12.2022 அன்று பேரூராட்சிகளிலும், 13.12.2022 அன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14.12.2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திமுகவில் இணைந்த கோவை செல்வராஜூக்கு ஓபிஎஸ் இந்த பதவி கொடுக்க முன்வந்தாரா? ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ பரபரப்பு தகவல்

போராட்டம் ஒத்திவைப்பு - அதிமுக

இந்நிலையில், புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாக கரையை கடக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களிலும் 9.12.2022 அன்று பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக வருகின்ற 16.12.2022 - வெள்ளிக் கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கேற்ற வகையில், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

ஆளுநரை சந்தித்த ஆன்லைன் விளையாட்டு நிர்வாகிகள்..! திடீர் ஆலோசனை.? என்ன காரணம் தெரியுமா..?

click me!