வேறு தொழிலுக்கு மாறும் அதிமுக புள்ளிகள்... ‘ரூட்’கிளியராகுமா..?

By Thiraviaraj RMFirst Published May 1, 2021, 1:29 PM IST
Highlights

கொரோனா தொற்றுக்கு முன் டவுன் பஸ்களின் வழித்தட மதிப்பு,  ரூ.10 லட்சம் முதல், 20 லட்சம் வரை, புறநகர் பஸ் வழித்தடம், 1 கோடி முதல், 2 கோடி ரூபாய் வரை இருந்தது.
 

கொரோனா தொற்றுக்கு முன் டவுன் பஸ்களின் வழித்தட மதிப்பு,  ரூ.10 லட்சம் முதல், 20 லட்சம் வரை, புறநகர் பஸ் வழித்தடம், 1 கோடி முதல், 2 கோடி ரூபாய் வரை இருந்தது.

இந்த விலையை, வசூல் அடிப்படையில நிர்ணயம் செய்தார்கள். கொரோனாவால், எட்டு மாதங்கள் தனியார் பஸ்கள் இயக்கம் நின்று விட்டது. இதனால் வங்கி, நிதி நிறுவனங்களில், பஸ் பெயர்களில் வாங்கிய கடனுக்கு, தவணை கட்ட முடியாமல், பலரும் திணறி வருகிறார்கள்.

 

''இப்போது கொரோனா மிரட்டிக் கொண்டு இருப்பதால்ல, பஸ் உரிமையாளர்கள் பலரும், பஸ்களை விற்று வருகிறார்கள். புறநகர் பஸ்கள், 30 முதல், 50 லட்சம் ரூபாய்க்கும், பழைய டவுன் பஸ்கள், 4.50 லட்சம் ரூபாய்க்கும் தான் விலை போகிறது. அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் பலரும், கரூர், சேலம், நாமக்கல்லில், பல வழித்தட பஸ்களை வாங்கி போட்டு வருகிறார்கள். 'கருத்து கணிப்புகளை பார்த்து, வேற தொழிலுக்கு மாறிவருகிறார்கள் என இதனை பார்த்து கலாய்க்கிறார்கள் பலரும்...

click me!