உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுக்கு கூடுதல் பொறுப்பு..!

Published : May 01, 2021, 12:53 PM IST
உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுக்கு கூடுதல் பொறுப்பு..!

சுருக்கம்

தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செயலாளர் தீரஜ் குமார் விடுப்பில் சென்றுள்ளதால், அவருடைய பணியை அபூர்வா மேற்கொள்வார் என தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அபூர்வா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா பள்ளிக்கல்வித்துறை செயலாளராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய முதன்மைச் செயலாளராக தீரஜ்குமார் பதவி வகித்த நிலையில அவர் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக துணைவேந்தர் சூரப்பா பதவி காலம் முடிவடைந்த நிலையில், துணைவேந்தர் பணிகளை மேற்கொள்ள, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா ஒருங்கிணைப்பாளராகவும், தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கூட்டணிக்கு வராவிட்டால்..? அமித் ஷாவின் ஹிடன் அஜெண்டா..! திமுகவுக்கு பொறி வைக்கும் ஃபைல்ஸ்..!
பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!