அட கொடுமையே.. ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. தலையில் அடித்து கதறும் பாரதம்.

By Ezhilarasan BabuFirst Published May 1, 2021, 12:13 PM IST
Highlights

மொத்தத்தில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கும் திகிலூட்டும் நிலையை எட்டியுள்ளன.  நாட்டில் தொடர்ந்து 10வது நாளாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்டு உள்ள தகவலில் 4,01,993 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 3.50 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முதல் அலையை விட இரண்டாவது அலையில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.  

குறிப்பாக இளம் வயதினரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் மூச்சு திணறலுக்கு ஆளாக்கி  உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுவதால் அதை நோயாளிகளுக்கு சப்ளை செய்ய முடியாமல் அரசு திணறி வருகிறது. எனவே பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கு அறிவித்து, மீண்டும் கட்டுப்பாடுகளைக் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் பின்வருமாறு:  கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 853 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1 கோடியே 97 லட்சத்து 64 ஆயிரத்து 969 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நேற்று ஒரே நாளில் இரண்டு லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், தொற்றுக்கு ஆளாவோரின்  எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளது. கவலையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது, மொத்தத்தில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கும் திகிலூட்டும் நிலையை எட்டியுள்ளன.  நாட்டில் தொடர்ந்து 10வது நாளாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கடைசியாக 10 நாட்களில் சராசரியாக மதிப்பிட்டால், ஒரு நாளைக்கு சுமார் 3.50 லட்சம் புதிய  தொற்றுகள் பதிவாகி வருகிறது.  மார்ச் மாதத்தில் வேகமெடுக்க தொடங்கிய கொரோனா ஏப்ரல் மாதத்தில் கட்டுக்கடங்காமல் தாக்கி வருகிறது. இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 45 ஆயிரத்து 862 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இது ஒரு மாதத்தில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு ஆகும். 

 

click me!