செந்தில்பாலாஜி அமைச்சராக இருப்பதால், நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ரகசிய கோப்புகளை அணுக இயலும் என்பதால் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி அதிமுக சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது செய்தது. அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற பரிசோதனையில் இருதய பகுதியில் 3 அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது செயற்கை சுவாச கருவியில் செந்தில் பாலாஜி இருப்பதாகவும்,
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கனும்
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.இந்தநிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் அதிமுக, நேற்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தியது. இந்தநிலையில் முன்னாள் எம்பி டாக்டர் ஜெயவர்த்தன் சார்பில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை மது தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றத்திற்குப் பிறகு செந்தில்பாலாஜியை அமைச்சராக ஆளுநர் அங்கீகரிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில்பாலாஜி மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன,
நீதிமன்றத்தை நாடிய அதிமுக
செந்தில்பாலாஜி அமைச்சராக இருப்பதால், நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ரகசிய கோப்புகளை அணுக இயலும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்