அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது... தமிழிசை ஆத்திரம்..!

By Thiraviaraj RMFirst Published Jul 30, 2019, 4:40 PM IST
Highlights

முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக தற்போது மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
 

முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக தற்போது மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, ’’முத்தலாக் மசோதாவில் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது தவறு. வேலூர் தேர்தலில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க இந்த முடிவை எடுத்துள்ளது. முத்தலாக் சட்டத்தால் பெண்கள் உரிமை பாதிக்கப்படுகிறது என்பது தெரிந்தும் எதிர்க்கின்றனர். ஓட்டுக்காகவே முத்தலாக் மசோதாவுக்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 

தி.மு.க.வில் நிகழும் உட்கட்சி பூசலால் கொலைகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அக்கட்சியில் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். வைகோ போன்றவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்’’ என அவர் தெரிவித்தார். 

click me!