முதலமைச்சர் ஸ்டாலினை தனியாக சந்தித்த ஓபிஎஸ் மகன்...? தலைமைச் செயலகத்தில் பரபரப்பு

By Ajmal KhanFirst Published May 18, 2022, 2:05 PM IST
Highlights

தேனி நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனிக்கு ரயில் சேவை

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதியை திமுக கூட்டணி கைப்பற்றியது. இதில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் திமுக தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியிலோ ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்று வாஷ் அவுட் ஆகாமல் காப்பாற்றிக்கொண்டது. இந்தநிலையில் தேனி பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற தேனி நாடாளுமன்ற உறுப்பினர் .ஓ.ப.ரவிந்திர நாத் தீவிர முயற்ச்சி எடுத்து வருகிறார். தேனி பகுதிக்கு ரயில் சேவை கொண்டு வர தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்.பி

இந்தநிலையில்  மாநில வளர்ச்சிக்குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருவமாவளவன், காங்கிரஸ் எம்பி திருநாவுகரசர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவிந்திரநாத்தும் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் சார்பில் நடைபெறக்கூடிய மாநில அளவிலான முதல் ஆய்வுக் கூட்டம் இந்தக் கூட்டமாக அமைந்திருக்கிறது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்குவதற்காக வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என்னுடைய
நன்றியை வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் நீங்கள் அனைவரும் ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சிக்கு ஆலோசனை சொல்வதற்காக வந்திருக்கிறீர்கள் இந்த ஆட்சி அமைந்தபோது நான் குறிப்பிட்டுச் சொன்னேன். இது எனது அரசு அல்ல நமது அரசு என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். அந்த வகையில் நம்முடைய அரசு என்ற பரந்த உள்ளத்தோடு நீங்கள் எவ்லோரும் இங்கே வந்து கூடியிருப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஆலோசனைகளை கூறும்படி கேட்டுக்கொண்டார்.

ஸ்டாலினை தனியாக சந்தித்த ஓ.பி.ஆர்

இந்த கூட்டம் முடிந்த பிறகு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் ஓ.பி. ரவிந்திரநாத் சந்தித்துப் பேசினார். அப்போது நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் செய்துதர வேண்டியும், அதற்கான மனுவையும் முதலமைச்சரிடம் அளித்தார். முதலமைச்சரை ஓ.பி,ரவிந்திரநாத் தனியாக சந்தித்து மனு கொடுத்த சம்பவம் தலைமை செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!