அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அதிமுக எம்.பி.யுமான சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பி.யுமான நேற்று இரவு 8.30 மணியளவில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க;- முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை கண்டு நடுங்கிக் கொண்டு இருக்கிறார் - சி.வி.சண்முகம் விமர்சனம்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க;- டெல்லி செல்லும் ஆளுநர் ரவி..? விரைவில் திமுக அரசு டிஸ்மிஸ்- பரபரப்பை கிளப்பும் ஜெயக்குமார்
சி.வி.சண்முகம் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.