தமிழகத்தில் துரதிஷ்டவசமாக திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்காக கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. ஏராளமான முதியோர்களுக்கு கிடைத்து வந்த உதவித்தொகையை திமுக அரசு நிறுத்திவிட்டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இதற்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்று திருடிக் கொண்டிருந்தார்கள், தற்போது காரில் சென்று திருடும் நிலை உருவாகிவிட்டது என திமுக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்;- அதிமுக ஆட்சி காலம்தான் பொற்கால ஆட்சியாக இருந்தது. உங்களால்தான் சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டேன்.. தமிழகத்தின் முதல்வராக வருவதற்கு வாய்ப்பை நீங்கள்தான் உருவாக்கி கொடுத்தீர்கள்.
இதையும் படிங்க;- உதயநிதி ஸ்டாலினை சாபக்கேடு என்று சொல்கிறா திருமா? எங்கிருந்து வந்தது தைரியம்! நாராயணன் திருப்பதி.!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி கொடுத்தார்கள். அவருக்கு பின்னர் நாம் சிறப்பாக செயல்பட்டு வந்தோம். ஆனால் தமிழகத்தில் துரதிஷ்டவசமாக திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்காக கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. ஏராளமான முதியோர்களுக்கு கிடைத்து வந்த உதவித்தொகையை திமுக அரசு நிறுத்திவிட்டது.
முதியோர் உதவித்தொகை, அம்மா மினி கிளினிக் போன்ற நிறுத்தப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் செயல்படுத்தப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும். வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை நீரேற்று திட்டத்தின் மூலமாக ஏரியில் இருக்கும் திட்டம் விவசாயிகளுக்கு மகத்தான திட்டம். இதில் கூட பாகுபாடு பார்க்கிறார்கள். அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்வு. இனி கனவில் மட்டுமே வீடு கட்ட முடியும்.
இதையும் படிங்க;- இபிஎஸ் கோட்டையில் கெத்து காட்ட திட்டமிடும் ஓபிஎஸ்.!டிடிவியோடு இணைந்து அடுத்த கட்ட திட்டத்திற்கு தயாரான பிளான்?
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்று திமுக அமைச்சரவையில் இருந்த அமைச்சர் பேசினார். இரண்டு ஆண்டுகளில் முப்பதாயிரம் கோடி கொள்ளையடித்துள்ளார்கள். தமிழகத்தின் முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக இருந்து வருகிறார். அவருக்கு குடும்பம் தான் முக்கியம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இதற்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்று திருடிக் கொண்டிருந்தார்கள், தற்போது காரில் சென்று திருடும் நிலை உருவாகிவிட்டது. எல்லோரையும் போதைக்கு அடிமையாகும் நிலையை திமுக அரசு ஏற்படுத்திவிட்டது. கள்ளக்கசாராய உயிரிழப்புகளை அடுத்து நான் வலியுறுத்திய பிறகே கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 1650 பேர் கைது செய்யப்பட்டார் என இபிஎஸ் ஆவேசமாக பேசியுள்ளார்.