அதிமுக எம்.எல்.ஏ.,வீட்டில் தேர்தல் அதிகாரிகள் திடீர் ரெய்டு..!

Published : Mar 02, 2021, 03:15 PM IST
அதிமுக எம்.எல்.ஏ.,வீட்டில் தேர்தல் அதிகாரிகள் திடீர் ரெய்டு..!

சுருக்கம்

பொதுமக்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக திமுக புகார் அளித்ததை அடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அதிமுக அமைச்சர்களும் எம்.எல்.ஏ.,க்களும் தொடர்ந்து செயல்பட்டுவருவதாக திமுக தரப்பு குற்றஞ்சாட்டிவருகிறது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களையும் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகின்றனர். நேற்று முன்தினம் விராலிமலையில் அமைச்சர் விஜய பாஸ்கரின் ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களை வழங்குவதாக திமுகவினர் புகார் அளித்தனர்.

முன்னதாக, வால்பாறையில் திமுகவினர் கொடுத்த புகாரின் மூலமாக அதிமுகவினர் தங்கள் வீடுகளில் பதுக்கிவைத்திருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னை,விருகம்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ விருகை வி.என்.ரவி வீட்டில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக திமுக புகார் அளித்ததை அடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!