சின்னப் பையன் பேசுறதை வேடிக்கை பார்க்கணுமா..? விஜயகாந்த் மகனுக்கு எதிராக பொங்கிய அதிமுக அமைச்சர்கள்..!

Published : Apr 12, 2019, 03:53 PM IST
சின்னப் பையன் பேசுறதை வேடிக்கை பார்க்கணுமா..? விஜயகாந்த் மகனுக்கு எதிராக பொங்கிய அதிமுக அமைச்சர்கள்..!

சுருக்கம்

விஜயகாந்த் என்கிற ஒற்றை மனிதருக்காகவே அதிமுக அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க இறுதிவரை காத்துக் கிடந்தது. ஆனால், அவரது உடல்நலம் ஒத்துழைக்காமல் போனது தேமுதிக கட்சியினருக்கே பேரிழப்புதான்,

விஜயகாந்த் என்கிற ஒற்றை மனிதருக்காகவே அதிமுக அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க இறுதிவரை காத்துக் கிடந்தது. ஆனால், அவரது உடல்நலம் ஒத்துழைக்காமல் போனது தேமுதிக கட்சியினருக்கே பேரிழப்புதான்,

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எப்படியும் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார் என நம்பி இருந்தனர். ஆனால், அவரால் எழுந்து நடமாட மட்டுமல்ல பேசக்கூட முடியாத சூழல். அவர் வந்து மக்களிடம் முகத்தை மட்டும் காட்டினால் போதும் என விருப்பம் தெரிவித்தனர். அதற்கும் விஜயகாந்த் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. 

இறுதி முயற்சியாக அவர் வாய்ஸ் கொடுத்து அதனை வெளியிடலாம் என திட்டமிட்டனர். அதுவே முடியாத நிலை. இந்நிலையில் தான் வாக்குசேகரிக்க தமிழகம் முழுவதும் கிளம்பி வலம் வருகிறார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. அவர்களது மகன் விஜயபிரபாகரனும் அம்மாவை போல மேடைகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். 

ஆனாலும் அவர்களது பிரச்சாரம் விஜயகாந்துக்கு இருந்த வரவேற்பில் 10 சதவிகிதம் கூட எடுபடவில்லை. இப்படிபட்ட சூழலில் தன் மகன் விஜய பிரபாகரன் பிரசாரத்த்தில், அந்தந்த அதிமுக மாவட்ட அமைச்சர்களும், தேமுதிக மாவட்ட செயலாளர்களும் உடன் செல்ல வேண்டும் என பிரேமலதா கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சர்களோ, 'எங்களது வயது என்ன... அனுபவம் என்ன... சின்ன பையன் பேசுவதை கேட்டு வேடிக்கை பார்த்துட்டு அவருக்கு பாதுகாப்புக்கு போகணுமா..? விஜயபிரபாகரன் அவ்வளவு பெரிய தலைவரா? இல்லை வானத்தில் இருந்து குதித்து வந்த நட்சத்திரமா..? அதெல்லாம் முடியாது’ என கடுப்படித்து விட்டாதாக கூறுகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!