தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய EPS - OPS...!

Published : Apr 12, 2019, 03:19 PM IST
தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய EPS - OPS...!

சுருக்கம்

40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளனர்.

40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தொண்டர்கள் அனைவரும் சோர்வடையாமல் தேர்தல் பணிகளை செய்து வர வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணைந்து தொண்டர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.

அதில், ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுகவுக்கு இந்த தேர்தல் ஒரு தாயில்லாப் பிள்ளைக்கு நடக்கும் முதல் பிரசவம் போன்றது. அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதை உணர்ந்து கொண்ட எதிர்கட்சிகள் தம்மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். மேலும் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களை திசை திருப்ப பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.

இதையெல்லாம் கண்டு தொண்டர்கள் மனம் தளரக்கூடாது. மக்கள் அனைவரும் அதிமுக மற்றும்  கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே என கூறுகின்றனர். பெரிய சாதனைகளாக சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லாமல் திமுக திண்டாடி வருவதால் தான் அதிமுக மீது பல தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன் வைக்கிறது திமுக என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

TN BJP: தமிழக பாஜகவில் ‘நாட்டாமை’ ஆகிறாரா சரத்குமார்? ராதிகா பெயரும் அடிபடுவதால் பரபரப்பு!
Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!