அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் நல்லாவே இருக்கமாட்டாங்க.. சபாம் விடும் ஆர்.பி.உதயகுமார்..!

Published : Jul 02, 2021, 12:40 PM IST
அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் நல்லாவே இருக்கமாட்டாங்க.. சபாம் விடும் ஆர்.பி.உதயகுமார்..!

சுருக்கம்

தமிழக மக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிதான் மீண்டும் முதல்வராக வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்றவர்கள் இரட்டை இலையைத் தோற்கடிக்க செயல்பட்டதால் இந்த முறை ஆட்சியைப் பறிகொடுத்தோம்.

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்து மாணவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியின் ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்;- தமிழக மக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிதான் மீண்டும் முதல்வராக வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்றவர்கள் இரட்டை இலையைத் தோற்கடிக்க செயல்பட்டதால் இந்த முறை ஆட்சியைப் பறிகொடுத்தோம்.

அதிமுகவுக்கு துரோகத்தை செய்தவர்கள் அதற்குரிய பலனை அடைந்துதான் ஆகவேண்டும். 7 கோடி பேருடன் யாரும் பேசட்டும். ஆனால், இரட்டை இலை சின்னம் இபிஎஸ்- ஓபிஎஸ் கரங்களில்தான் இருக்கும். அவர்கள் பின்னால் கட்சி ஓரணியாக பயணித்துக் கொண்டிருக்கிறது என்றார்.

மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்து மாணவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த விவகாரத்தில் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசாமல் மௌனவிரதம் இருக்கிறார்களா? என ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!