பிடிஆரின் ஆடியோ உண்மையா .? பொய்யா.? விசாரணை நடத்திடுக- நீதிபதி, மத்திய அமைச்சருக்கு அதிமுக பரபரப்பு கடிதம்

By Ajmal Khan  |  First Published May 16, 2023, 8:12 AM IST

தமிழக முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய நிதியமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு அதிமுக வழக்கறிஞர் பாபு முருகுவேல் கடிதம் எழுதியுள்ளார். 


பிடிஆர் ஆடியோ விவகாரம்

தமிழக நிதி அமைச்ராக இருந்த பிடார் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகன் மற்றும் மருமகன் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாகவும், அதனை மறைக்க முடியாமல் திணறி வருவதாகவும் இடம்பெற்றிருந்தது. இந்தநிலையில், இது தொடர்பாக  விசாரணை நடத்த கோரி, அதிமுக வழக்கறிஞர் பாபு முருகுவேல்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய நிதியமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரத்தில், அந்த குரல் பதிவின் உண்மை தன்மையை ஆராய்ந்து அவர்கள் கூறியிருக்கிற குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 

Latest Videos

undefined

நீதிபதிக்கு கடிதம்

மாறாக அது இவர்களின் குரலை போலவே யாரோ ஒருவர் பேசி அனுப்பி இருந்தால் அந்த நபர் யார் என்று கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 25.4.2023 அன்று மத்திய லஞ்ச ஒழிப்பு துறைக்கும், மத்திய புலனாய்வு துறைக்கும் நான் புகார் மனு அனுப்பியிருந்தேன் . அதன் மீது உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லையென தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பி.டி.ஆர் பேசியதாக மற்றொரு ஆடியோவும் வெளியானது. இதில் பாஜகவின் சட்ட விதிகள் சரியாக இருப்பதாகவும், கட்சி மற்றும் ஆட்சியை பிரித்து பார்ப்பது சரியான நிலை என தெரிவித்திருப்பது போல் ஆடியோ வெளியானது.  இந்நிலையில் தான் அனுப்பிய புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்,  

விசாரணை நடத்திடுக

உச்சநீதிமன்ற தலைமை நீதியரசருக்கும், பெருவாரியான பணம் இதிலே சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற காரணத்தினால் சிறப்பு புலனாய்வு குழுவை பணம் சார்ந்த விஷயங்களுக்கு நியமிக்கும் அதிகாரம் மத்திய நிதி அமைச்சருக்கு இருக்கிறது என்பதன் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சருக்கும், இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை சிறந்த அதிகாரிகளை கொண்டு நியமிக்கின்ற அதிகாரம் மாண்புமிகு முதலமைச்சருக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கும் அனுப்புவதாக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல்  தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அட பொசுக்குன்னு! ஓபிஎஸ்-ஐ பார்த்து இபிஎஸ் இப்படி சொல்லிட்டாரே! ஒரத்தநாட்டில் பொதுக்கூட்டத்தில் ஆவேச பேச்சு..!

click me!