ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிரடி கைது.. அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி..

Published : Aug 31, 2021, 12:25 PM ISTUpdated : Aug 31, 2021, 12:32 PM IST
ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிரடி கைது.. அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி..

சுருக்கம்

ஜெயலலிதா பல்கலைக்கழகம் விவகாரத்தில், சென்னை கலைவாணர் அரங்கம் எதிரே சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  

ஜெயலலிதா பல்கலைக்கழகம் விவகாரத்தில், சென்னை கலைவாணர் அரங்கம் எதிரே சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது . இதில் பல்வேறு அறிவிப்புகளும் அதின் மூதான விவாதங்கள் காரசார விவாதங்களும் நடைபெற்று வருகிறது. 

விழுப்புரத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜெயலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவை கண்டித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் கலைவாணர் அரங்கத்தின் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓபிஎஸ் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓபிஎஸ் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்தனர். வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

Vijayabaskar: இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த விஜயபாஸ்கர்.. ராஜினாமா முடிவுக்குப் பின் தவெகவா... திமுகவா..?
Crop Loan Waiver 2026: பயிர்க்கடன் முழுசா தள்ளுபடி! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம் இதோ!