ஓ.பி.எஸ், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது... அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா..!

Published : Aug 31, 2021, 11:57 AM ISTUpdated : Aug 31, 2021, 12:01 PM IST
ஓ.பி.எஸ், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது... அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா..!

சுருக்கம்

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜா சாலையில் மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.  

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜா சாலையில் மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.

சென்னை, கலைவாணர் அரங்கம் முன்பு சாலையில் அமர்ந்து அதிமுகவினர் தர்ணா நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா வில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட்டார். 

ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதை கண்டித்து சி.வி.சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா பல்கலை., உட்பட 4 மாவட்ட கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார்.  

இந்நிலையில், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாலாஜா சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பேமிலி, பிரெண்ட்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்களில் கூட விஷம் பரப்பும் மதவாதிகள்.. அலெர்ட் கொடுக்கும் முதல்வர்..
நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு