அதிமுக ஆட்சியில் பதிவுத்துறையில் ஆள்மாறாட்டம், போலி பத்திரம் தயாரிப்பு.. பகீர் கிளப்பும் அமைச்சர் மூர்த்தி..!

By vinoth kumarFirst Published Aug 31, 2021, 11:42 AM IST
Highlights

வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.  வரி செலுத்துவது எளிமைப்படுத்தப்படும். தமிழகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. 

வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி;- பத்திரபதிவுத்துறையில் கோவை மாவட்டத்தில் 10 பேர்  தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மானிய கோரிக்கையில் பல்வேறு அதிரடி நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகும். கடந்த அதிமுக ஆட்சியில் பதிவுத்துறையில் ஆள்மாறாட்டம், போலி பத்திரம் தயாரிப்பு போன்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பத்திரப்பதிவுத் துறையில் அதிகளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. 

வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.  வரி செலுத்துவது எளிமைப்படுத்தப்படும். தமிழகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. வணிகத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளது என தெரிவித்துள்ளார்.

click me!