சொத்து இருந்துச்சு பதவி கொடுத்தோம்! உண்மையைக் கக்கும் மதுசூதனன்! 

 
Published : Jan 26, 2018, 03:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
சொத்து இருந்துச்சு பதவி கொடுத்தோம்! உண்மையைக் கக்கும் மதுசூதனன்! 

சுருக்கம்

AIADMK leader Madusudanan talks

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பணம் முழுவதும் சசிகலாவிடம்தான் இருந்தது என்றும் அதன் காரணமாகவே அவரை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தோம் என்றும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா காலமானதை அடுத்து, அதிமுகவின் பொது செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை செல்லும்முன் சசிகலா, துணை பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமித்தார்.

இதன்பின்பு, அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ். பிரிந்தார். பல்வேறு குழப்பங்கள், குளறுபடிகளுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தன. தற்போது, ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். ஒருங்கிணைந்து தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. 

இந்த நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா வாசித்த அறிக்கைகள் எல்லாமே நான் எழுதி கொடுத்தவைதான் என்றார். நான் போட்டு கொடுத்த இலவச திட்டங்கள்தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன. ஜெயலலிதாவிடம் வாழ்நாள் முழுவதும் இருந்த நல்ல விஷயம் நான் எழுதிக் கொடுத்த அனைத்து விஷயங்களையும் ஒரு கமா, புல்ஸ்டாப் இல்லாமல் அப்படியே பின்பற்றி வெற்றியைக் கண்டார் என கூறியிருந்தார்.

நடராஜனின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், விழா ஒன்றில் பேசும்போது, இதையெல்லாம் ஏன் இப்போது சொல்கிறார். இவருக்கு பதில் சொல்வதற்கு ஜெயலலிதா இல்லை என்பதற்காகவா? நடராஜனுக்கு தாலி எடுத்துக் கொடுத்தது யார்? அதிமுகவை வைத்து திமுகவை சேர்ந்தவர்களுக்குத்தான் நடராஜன் அனைத்தும் செய்து கொடுத்துள்ளார் என்று கூறியிருந்தார். நடராஜனுக்கும் அதிமுகவுக்கும் என்ன தொடர்பு? இன்று எல்லாவற்றையும் மறைத்து நாடகமாடுகிறார் என்று மதுசூதனன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மதுசூதனன் மேலும் பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார். மதுசூதனன், செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகர் தோல்விக்கு காரணமானவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்றார். மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பணம் முழுவதும் சசிகலாவிடம்தான் இருந்தது. அதன் காரணமாகவே அவரை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தோம் என்று அவர் தெரிவித்தார். மதுசூதனின் இந்த பேச்சு அதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!