Shocking News: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்.. கண்ணீர் கடலில் அதிமுக தொண்டர்கள்.

Published : Aug 05, 2021, 04:27 PM ISTUpdated : Aug 05, 2021, 04:38 PM IST
Shocking News:  அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்.. கண்ணீர் கடலில் அதிமுக தொண்டர்கள்.

சுருக்கம்

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று நேரத்துக்கு முன் காலமானார். அவருக்கு வயது (81) அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வயது மூப்பின் காரணமாகவும் உடல் நிலை குறைவு காரணமாகவும் கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர். கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெண்டிலேட்டர் உதவியுடன் தனது வாக்கை பதிவு செய்தார். தொடர் கொரோனா பரவல் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்து வந்த  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

ஆபத்தான நிலையில்  வெண்டிலேட்டர் துணையுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானார். முன்னதாகவே எதிர்க்கட்சித்தலைவராக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா ஆகியோர் அவரை சந்தித்து ஆறுதல் கூறி இருந்தனர். இந்நிலையில் இன்று காலை அவரது நிலை மோசமடைந்தது. அதிமுகவினர் மருத்துவ மனை முன்பு திரண்டனர் இந்நிலையில். பிற்பகல் நான்கு மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. மதுசூதனன் மறைவு அதிமுக தொண்டர்களை மிகுந்த துயரத்திலும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!