கொள்கைக்கு எதிராக செயல்பட்ட அதிமுக ஐடி விங் துணைத்தலைவர் நீக்கம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை..!

Published : Aug 18, 2021, 09:52 AM ISTUpdated : Aug 18, 2021, 09:55 AM IST
கொள்கைக்கு எதிராக செயல்பட்ட அதிமுக ஐடி விங் துணைத்தலைவர் நீக்கம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை..!

சுருக்கம்

கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் கொள்ளை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் பாலமுருகன் அக்கட்சியில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் பாலமுருகன்( புரசைவாக்கம்) சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர்  இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். 

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!
கொடநாடு வழக்கில் அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை..! திடீர் கோடீஸ்வரர்களான முக்கிய மூளைகள்..! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்கள்..!