தமிழகம் இன்றுவரை அமைதி பூங்காவாக இருக்க அதிமுகதான் காரணம்.. திமுகவை அலறவிடும் ஜே.சி.டி.பிரபாகர்.

Published : Mar 24, 2021, 10:56 AM IST
தமிழகம் இன்றுவரை அமைதி பூங்காவாக இருக்க அதிமுகதான் காரணம்.. திமுகவை அலறவிடும் ஜே.சி.டி.பிரபாகர்.

சுருக்கம்

எனவே  மக்கள் அதிமுகவை ஆதரித்து வருகிறார்கள். அதிமுக அரசு அனைத்து இடத்திலும் வெற்றியை பெற உள்ளது. குறிப்பாக வில்லிவாக்கம் தொகுதியில் இதுவரை சந்தித்திடத்த அளவில் பெரிய மாற்றமும் இந்த தேர்தலில் மக்கள் பெரும் வெற்றியை அளிக்க இருக்கிறார்கள்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள்  பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கூறியதாவது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செய்த சாதனைகள் மக்கள் மனதில் தெளிவாக பதிந்துள்ளது. 

மக்கள் அமைதியான ஆட்சியை விரும்புகிறார்கள், தமிழகம் இப்போதுவரை அமைதி பூங்காவாகவும், அராஜகம் ஏதும் இல்லாமல் இருக்க அதிமுக ஆட்சிதான் காரணம் என்று கூறினார். மேலும் பல துறைகளில் சாதித்து அதிமுக அரசு விருதுகளை குவிக்கின்ற ஒரு அரசாக இருக்கிறது. இது போன்று  வேறு ஒரு மாநிலம்  எங்காவது உண்டா என்ற அவர், எல்லா நிலையிலும் தமிழகம் முதன்மையாக உள்ளது. 

எனவேதான்  மக்கள் அதிமுகவை ஆதரித்து வருகிறார்கள்.அதிமுக அரசு அனைத்து இடத்திலும் வெற்றியை பெற உள்ளது. குறிப்பாக வில்லிவாக்கம் தொகுதியில் இதுவரை சந்தித்திடத்த அளவில் பெரிய மாற்றமும் இந்த தேர்தலில் மக்கள் பெரும் வெற்றியை அளிக்க இருக்கிறார்கள். அம்மாவின் ஆசி எங்களுக்கு உள்ளதால் நாங்கள் இந்த தொகுதியில் மகத்தான வெற்றியை பெறுவோம் என்பது உறுதி என கூறினார். மேலும் திராவிட முன்னேற்ற கழகம் அவர்களுக்கு பிடித்த வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள், ஆனால் அதிமுக மக்களுக்கு பிடித்த வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது என்று கூறினார். 

 

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!