தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவ காரணமே அதிமுக தான்... பகீர் கிளப்பும் எம்.பி.மாணிக்கம் தாகூர்..!

By vinoth kumarFirst Published Jun 11, 2021, 3:04 PM IST
Highlights

அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசியை வாங்க நடவடிக்கை எடுக்காமல் சட்டமன்ற தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டதால் தான் தமிழகத்தில் நோய்தொற்று பரவுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

நாட்டில் கொரானாவை ஒழித்து விட்டோம் என்று மத்திய அரசு அறிவித்து ஆறரை கோடி தடுப்பூசி மருந்துகளை வெளிநாட்டிற்கு அனுப்பியது துரதிஷ்டவசமானது என எம்.பி.மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். 

சிவகாசியில் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான தீப்பெட்டி தயாரிக்கும் பணிக்கு தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்தது போல, பட்டாசு தொழிற்சாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

மேலும், தமிழகத்தில் தடுப்பூசி கிடைக்காததற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு தடுப்பூசி போட  முடியாததற்கும் காரணம் மத்திய அரசுதான் இப்பிரச்சனையில் ஒன்றிய அரசு பாரபட்சம் பார்க்காமல் பின்தங்கிய மாவட்டமான விருதுநகர் மாவட்ட மக்களைப் பாதுகாக்கும் வகையில் கொரானா தடுப்பூசி வழங்க வேண்டும். மத்திய அரசு தடுப்பூசி மருந்து வழங்குவதில் காட்டிய மெத்தனப் போக்கில் விளைவாகவே கொரோனா நோய்த்தொற்றின் 2வது பரவல் காரணமாக அமைந்துள்ளது என்றார். 

நாட்டில் கொரானாவை ஒழித்து விட்டோம் என்று மத்திய அரசு அறிவித்து ஆறரை கோடி தடுப்பூசி மருந்துகளை வெளிநாட்டிற்கு அனுப்பியது துரதிஷ்டவசமானது. அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசியை வாங்க நடவடிக்கை எடுக்காமல் சட்டமன்ற தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டதால் தான் தமிழகத்தில் நோய்தொற்று பரவுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. இதற்கு மத்திய மோடி தலைமையிலான பாஜக அரசும் அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான  அதிமுக அரசும் தான் காரணம் எனக் குற்றம்சாட்டினார். 

click me!