வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி. அடுத்த 2 தினங்களுக்கு பிச்சு உதறப்போகிறது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jun 11, 2021, 2:46 PM IST
Highlights

வங்கக்கடல், அதனையொட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை கடக்கக்கூடும் எனவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு 11-6-2021, 12-6-2021 பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடல், அதனையொட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை கடக்கக்கூடும் எனவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு 11-6-2021, 12-6-2021 பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் 31 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடனும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என  எச்சரிக்கப்பட்டுள்ளது. 

13-6-2021, 14-6-2021 மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், 15-6 2021 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு பந்தலூர் (நீலகிரி) 4 சென்டிமீட்டர் ஆரிசன் எஸ்டேட் (நீலகிரி) 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

வங்க கடல் பகுதிகள்: 11-6-2021 முதல் 13-6-2021 வரை தெற்கு வங்ககடல் மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அரபிக்கடல் பகுதிகள்:  13-6-2021 முதல் 15-6-2021 வரை கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 11-6-2021 முதல் 15-6-2021 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  

 

click me!