எல்லாத்துக்கும் பா.ம.க.,தான் காரணம்... சி.வி.சண்முகம் சொல்லும் விளக்கம்... அதிர்ச்சியில் அதிமுகவினர்..!

Published : Jun 11, 2021, 02:36 PM IST
எல்லாத்துக்கும் பா.ம.க.,தான் காரணம்... சி.வி.சண்முகம் சொல்லும் விளக்கம்... அதிர்ச்சியில் அதிமுகவினர்..!

சுருக்கம்

ஆட்சியை இழந்தும், தேர்தலில் தோற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போலீஸ் பாதுகாப்புடன் பழைய கெத்து மாறாமல் உலா வருகிறார்.   

ஆட்சியை இழந்தும், தேர்தலில் தோற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போலீஸ் பாதுகாப்புடன் பழைய கெத்து மாறாமல் உலா வருகிறார். 

அதிமுக ஆட்சியில் பவர்புல் அமைச்சராக வலம் வந்தவர் சி.வி.சண்முகம். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சட்டமன்றத்தேர்தலில் தோல்வியை தழுவினார். தேர்தல் தோல்விக்குப்பின் ஒருமாதம் வெளி உலகத்தையே எட்டி பார்க்காத சி.வி.சண்முகம், தற்போது மீண்டும் அக்கட்சியில் பவர்புல்மேனாக    பேட்டி கொடுத்து தன்னை நிலைநிறுத்தி வருகிறார். பாமகவை சேர்ந்த மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.,வை ராஜினாமா செய்யச்சொல்லி இடைத்தேர்தலில் போட்டியிட அவர் முயற்சி செய்வதாக வரும் தகவல்கள் தனிக்கதை.

முன்பு, அமைச்சராக  இருந்தபோது எப்படி இருந்தாரோ அதே,  கெத்தில்தான் தற்போதும் காரில் வலம் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இவருக்கு சைரன் வைத்த போலீஸ் எஸ்கார்டு, எஸ்ஐ உள்ளிட்ட 3  துப்பாக்கி  ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, அதே பிஎஸ்ஓவுடன் கட்சி அலுவலகம் என  செல்லும்  இடமெல்லாம் இன்னும் அமைச்சர் கெத்தில் சுற்றி வருவதாக கூறுகிறார்கள். எம்.எல்.ஏ., பதவிக்கூட இல்லாத கட்சிபிரமுகருக்கு அமைச்சருக்கு நிகரான பாதுகாப்பு எப்படி வழங்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை அதிமுக கட்சியினரே எழுப்பி வருகிறார்கள்.

 

அதற்கு முன்னாள் அமைச்சர், ’’பாமக தரப்பு தன்னை கொல்ல முயன்ற வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அவர்களால் அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் கூறி இந்த பாதுகாப்பை பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். தற்போது ஒரேகூட்டணியில் உள்ள நிலையில், இந்த  அச்சுறுத்தல்  இன்னும் இருக்கிறதா? என்ற கேள்வியை அதிமுகவினரே சந்தேகம் கிளப்பி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?