அதிமுக ஒரு ஆன்மீக கட்சி... திராவிட கட்சிகளை யாராலும் அழிக்க முடியாது, ரஜினிக்கு ஷாக் கொடுத்த கேடிஆர்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 10, 2020, 2:27 PM IST
Highlights

ஸ்டாலினால் ஒரு திருக்குறளை பேப்பர் இல்லாமல் பேச முடியுமா என கேள்வி எழுப்பிய அவர்,யாரையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை, மக்களுக்கு பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தையே அதிமுக கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ரஜினி அரசியலுக்கு வந்துள்ளது அற்புதம் தான் என்றும், ரஜினி ஆரம்பிக்க போகும் கட்சியால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர். ஆ.ராசா தொடர்பான கேள்விக்கு, ராசா பேசுவதற்கு எந்த தகுதி யும் இல்லை என்றும், ஓட்ட சைக்கிளில் போனவர் தற்போது காரில் சென்று கொண்டிருக்கிறார் அதை அவர் உழைத்து சம்பாதித்தாரா எனவும், தகுதி இல்லாதவர்களுடன் விவாதம் செய்ய நானும் தயாராக இல்லை என்றும் கூறினார். மேலும், நான் கோமாளியா அல்லது அவர்கள் கோமாளியா என்பது தேர்தலில் தெரிய வரும் என கூறிய அவர், ஸ்டாலின் நடித்து வருவதாகவும், திமுக ஒரு தருதலை கட்சி என்றும் விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முரசொலியில் எப்போதுமே தலைவர்களை அசிங்கப்படுத்தி தான் போடுவார்கள் என சுட்டிக்காட்டிய அவர், 
ஸ்டாலின் ஒருமையில் பேசினால் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? பதில் கூறும் இடத்தில் இருக்கும் நான் கட்டாயம் பதில் கூறுவேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.திமுக எந்த ஆயுதத்தை கையில் எடுக்கிறார்களோ அதையே நாங்களும் கையில் எடுப்போம் என தெரிவித்த அவர், நாங்கள் பேசுவதில் உண்மை இருப்பதாகவும், அதை உரக்க சொல்வோம் என்றும் உறுதிப்பட கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் என்ன பைத்தியகாரனா? என கேள்வி எழுப்பிய அவர், ஸ்பெக்ரம் ராசா என்று தானே அவருக்கு பெயர் என்றும், ராசாவிற்கு ஆப்பு வைப்பதே எங்கள் எண்ணம் எனவும் அவர் கூறினார். 

ஆன்மீக அரசியலை வழி நடத்தினால் தான் ஆன்மீக கட்சி என கூறிய அவர், அதிமுக ஆன்மீக கட்சி ஆன்மீக ஆட்சி என்றும், எங்கள் கொள்கைகளை, ஆட்சியை ரஜினிக்கு பிடித்திருக்கலாம் அதனால் அவர் எம்.ஜி ஆரை  முன்னிலைப்படுத்தலாம், அதில் தவறு இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக முதலமைச்சர் மாவட்டங்களுக்கு சென்று பயிரை பிடித்து வருவதாகவும், ஆனால் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மயிரை தான் பிடித்து வருகிறார் என்றும் விமர்சனம் செய்தார்.

ஸ்டாலினால் ஒரு திருக்குறளை பேப்பர் இல்லாமல் பேச முடியுமா என கேள்வி எழுப்பிய அவர்,யாரையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை, மக்களுக்கு பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தையே அதிமுக கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.திராவிட கட்சிகளையும் தேசிய கட்சிகளையும் யாரும் அழிக்க முடியாது என குறிப்பிட்ட அவர், கட்சி ஆரம்பிக்கும்போதே ரஜினி அதிமுகவுடன் கூட்டணி என்று கூறுவாரா? என்றும், அவர் ஆரம்பிக்கும் கட்சியினால் அழிய போவது திமுக தான் எனவும் கூறினார். ரஜினி பாட்ஷா படத்தின் போது கட்சி ஆரம்பித்து இருந்தால் தற்போது பெரிய அளவில் வந்திருப்பார் என கூறிய அவர், ரஜினியுடன் கூட்டணி தொடர்பாக முதல்வர் முடிவு செய்வார் என்றும், ரஜினி அரசியலுக்கு வந்துள்ளது அற்புதம் தான் எனவும் கூறினார்.

 

click me!