அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் வறண்ட வானிலை.. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மட்டும் மழை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 10, 2020, 2:12 PM IST
Highlights

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை  31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

அடுத்த 48 மணி நேரத்தில் (10-2-2020) (11-2-2020) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் ஏனைய தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை  31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பழவிடுதி (கரூர்) 5சென்டி மீட்டர் மழையும், பாபநாசம் (திருநெல்வேலி) வேப்பந்தட்டை (பெரம்பலூர்) சோலையூர் (கோவை) வைகை அணை (தேனி) தலா 3 சென்டிமீட்டர் மழையும், திருப்பத்தூர் (சிவகங்கை) ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 2 சென்டி மீட்டர் மழையும், மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி) பாலக்கோடு (தர்மபுரி) பூண்டி (திருவள்ளூர்) பேராவூரணி (தஞ்சாவூர்) உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) தாமரைபாக்கம் (திருவள்ளூர்) அரிமளம் (புதுக்கோட்டை) வேதாரண்யம் (நாகப்பட்டினம்) மணிமுத்தாறு (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

click me!