ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா..? கையும்களவுமாக பிடித்த திமுகவினர்.. உச்சகட்ட பரபரப்பு..

Published : Apr 05, 2021, 11:10 AM ISTUpdated : Apr 05, 2021, 11:12 AM IST
ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா..?  கையும்களவுமாக பிடித்த திமுகவினர்.. உச்சகட்ட பரபரப்பு..

சுருக்கம்

அவர்கள் வைத்திருந்த லிஸ்டில் ரூபாய் 50 லட்சத்திற்கும் மேல் பணம் கொடுக்கப்பட்டதாக குறிப்பெடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் வழக்கறிஞர்களை கடுமையாக தாக்கினர்.  

பணம் பட்டுவாடா செய்வதாக கூறி அதிமுகவினரை சிறை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த திமுகவினர் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ரூபாய் 50 லட்சத்திற்கும் மேல் பணம் கொடுத்ததாக கூறி குறிப்பெடுத்து வைக்கப்பட்டிருந்த லிஸ்ட் சோதனையில் சிக்கியது அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிரீம்ஸ் சாலை, காதர் நவாஸ்கான் சாலையில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக கூறி ஆறு பேர் கொண்ட அதிமுக வழக்கறிஞர்களையும், அவர்களின் விலை உயர்ந்த காரையும் சிறைபிடித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் திமுகவினர் ஒப்படைத்தனர். 

தகவலறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்பட்ட வழக்கறிஞர்களின் விலை உயர்ந்த காரை சோதனையிட கூறினர்.அப்போது போலீசார் சோதனை செய்ததில் காரில் பணம் ஏதும் இல்லை. பின்பு திமுகவினர் போலீசாரின் உதவியோடு காரை முழுவதுமாக சோதனை செய்ததில்,  வட்டம் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது என்ற லிஸ்ட் காரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவர்கள் வைத்திருந்த லிஸ்டில் ரூபாய் 50 லட்சத்திற்கும் மேல் பணம் கொடுக்கப்பட்டதாக குறிப்பெடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் வழக்கறிஞர்களை கடுமையாக தாக்கினர். தகவலறிந்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் சம்பவ இடத்திற்கு  வந்து திமுகவினரை சமாதனம் செய்து அனுப்பி வைத்தார்.மேலும் பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படும் வழக்கறிஞர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.திமுகவினர் பிடித்துக்கொடுத்த அதிமுக வழக்கறிஞர்களிடம் ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எழிலன், சந்தேகத்தின் பெயரில் இருந்த கார் மற்றும் அதில் பயணித்த நபர்களையும் காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரியிடம்  ஒப்படைத்துள்ளோம், தேர்தல் விதிகளை மீறி தொகுதி அல்லாத நபர்கள் இந்த பகுதியில் இருப்பதற்கு  என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். தேர்தல் அதிகாரிகள் செய்யவேண்டிய வேலைகளை நாங்கள் செய்கின்றோம் எனவும் இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!