துறைமுகம் தொகுதியில் ரத்தக்களறி.. பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு...

By Ezhilarasan BabuFirst Published Apr 5, 2021, 10:47 AM IST
Highlights

நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சார்பாக வினோஜ் பி.செல்வம் மற்றும் திமுக சார்பாக சேகர்பாபுவும் போட்டியிடுகின்றனர்.

நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சார்பாக வினோஜ் பி.செல்வம் மற்றும் திமுக சார்பாக சேகர்பாபுவும் போட்டியிடுகின்றனர்.அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினரும்,  திமுக கூட்டணி கட்டியினரும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு 7 மணியோடு பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், பாஜக நிர்வாகியான சரத்குமார் என்பவர் துறைமுகம் தொகுதி அப்பராவ் தோட்டம் அருகே நடந்து சென்ற பொழுது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் தாக்கியுள்ளனர். 

அதில் இருந்து தப்பிக்க முயன்ற அவருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது, அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வருவதை கண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் தப்பியோடியுள்ளனர். கையில் வெட்டு காயத்தோடு இருந்த அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காயமடைந்த பாஜக நிர்வாகியிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சுப்பராவ் தோட்டம் பகுதியில் உள்ள குடிசைவாழ் மக்களின் வாக்குகளை பெற திமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும்,  அதே பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான சரத்குமார் அதனை தடுத்ததோடு, பாஜகவிற்கு வாக்குகளை செலுத்தும் வகையில் செயல்பட்டதாகவும், அந்த பகுதியில் பாஜகவிற்றாக பணியாற்றியதற்காக திமுகவினர் தன்னை வெட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கூறும் பொழுது திமுகவினர் பாஜகவிற்கு சாதகமான வாக்களர்களை மிரட்டி அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராத வண்ணம் செய்யவே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 

click me!